துறைமுக பணியாளர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Thursday, July 27th, 2017

அகில இலங்கை துறைமுக பணியாளர்கள் சங்கம் நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிதத்துள்ளது.

இதனை இன்று அறிவித்துள்ளது.முன்னதாக, ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள இந்த சங்கம் தீர்மானித்திருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அனுமதி கோரும் ஒப்பந்தத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது

Related posts:


சமூக ஊடங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சே வேண்டுகோள் விடுத்தது - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்கு...
மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் - தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தயார் - சுகாதார...