டிசம்பர் மாதத்திற்கு முன் உள்ளூராட்சி தேர்தல்: நிறைவேறியது சட்டமூலம்!

Friday, August 25th, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 120 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் இவ்வருடத்தின் இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையெ வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி கல்விப்பொததராதர சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: