ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை?

Thursday, January 31st, 2019

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜோன்சன் தயாரிப்புகள் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களை எஸ்பெஸ்டஸ் டெஸ்ட் இற்கு உட்படுத்தி புற்றுநோய் இலவசம் என ஜோன்சன் நிறுவனமானது உறுதி செய்யும் வரையில் இறக்குமதிகளை நிறுத்தியுள்ளதாக இருநாட்டு தரப்பும், ஜோன்சன் தயாரிப்புகளது உள்நாட்டு விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளதாக ரொய்டர் செய்தியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இலங்கையில் கையிருப்பில் உள்ள உற்பத்திககள் விற்பனை செய்யப்படலாம், ஆனால் இவற்றின் புதிய இறக்குமதி எதுவும் இல்லை எனவும், இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான சுகாதார தயாரிப்பாக விளங்கும் இந்தியாவின் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் (J&J) இனது இறக்குமதிகளை பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெரும் வகையில் இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: