அதிக விலையில் அரிசி விற்பவர்களுக்கு எதிராக திங்கள்முதல் நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, November 6th, 2020

அரிசி விற்பனைக்காக அதிகபட்ச விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீறி வி;பனை செயற்படுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகள் ஊடாக குறித்த சுற்றிவளைப்புக்களை  மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசி உற்பத்தியாளர்களுக்கு மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, 1 கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாவாகவும் வௌ்ளை / சிகப்பு சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மேலும், நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததுடன் வௌ்ளை /சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச விற்பனை விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: