சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

Saturday, June 10th, 2017

சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா குறிப்பிட்டார்.

சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் 1929 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.கட்டாயக்கல்வி கிடைக்காத சிறுவர்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா மேலும் குறிப்பிட்டார்

Related posts:

சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. - பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ' நாளையதினம் ஜனாதிபதி மற்றும் பிர...
புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் இந்தியாவிலிருந...
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் குணவர்தன...