சிறந்த முறையில் பங்குச் சந்தைப் பரிவர்தனை – பங்குச் சந்தையின் தலைமைநிறைவேற்று பணிப்பாளர்!

Tuesday, March 6th, 2018

உறுதியற்ற நிலையில் இலங்கையின் அரசியல் நிலைமை உள்ள போதிலும், இந்த ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் சிறந்த முறையில் செயல்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்ந்து பங்குச் சந்தையின் செயல்பாடுகள் வீழ்ச்சியடைந்து செல்வதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் தலைமைநிறைவேற்று பணிப்பாளர் ராஜீவ பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை முற்றாக மறுத்துள்ள அவர் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பங்குச் சந்தை நிலவரம் முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களினால் இலங்கையில் அரசாங்கம் தெரிவு செய்யப்படுவதனால், பொருளாதார ரீதியாக ஏற்படும் மாற்றத்தை பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் அதற்கேற்ற வகையில்திருத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தைக்கான வெளிநாட்டு உள்வாங்கல் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூதலீட்டாளர்கள் மூலம் இந்த வருடத்தின் இதுவரையான நாட்களிலும் 112 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த ஆண்டுடன்ஒப்பிடுகையில் அதிகம் என கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: