சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் முற்றிலும் அரசியல் தலையீடா?

Wednesday, May 23rd, 2018

சமுர்த்தி திணைக்களமும் சமுர்த்தி வங்கியும் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாடு மற்றும் நிதி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ள மக்களைத் தெரிவு செய்வதில் அரசு நிச்சயமானதொரு நடைமுறையோ அல்லது பரிந்துரையோ இல்லாது சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு இறுதிவரை எதிர்வரும் 18 மாதங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்காக அரசு 1,50,000 புதிய சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்து சமுர்த்தி நிவாரணம் வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் ரீதியிலும் ஆளும் கட்சி ரீதியிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சமுர்த்தி நிவாரணத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியினரைத் திருப்திப்படுத்தும் அரசியல் திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த விமர்சனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சமுர்த்தி திணைக்களத்துக்குப் பொறுப்பாகவிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஊடகத் தரப்புக்குத் தெரிவிக்கையில், முன்னர் சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்காக அனைத்துப் பிரதேச மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு ஏற்ப சமுர்த்தி நிவாரணத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆயினும் அது பற்றி தற்போதுள்ள அரசாங்கம் குற்றச்சாட்டுக்களையும் குறைபாடுகளையும் சுமத்திவிட்டு புதிய சமுர்த்தி நிவாரணப் பயனாளிகளின் தெரிவை முற்றிலும் அரசியல் ரீதியில் மேற்கொண்டு புதிதாக 1,50,000 சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: