கொல்வின் சைட்டம் ஆதரவாளர்– குற்றம் சுமத்துகிறார் பேராசிரியர் காலோ பொன்சேகா!

Thursday, October 5th, 2017

இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டமையானது சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை சட்டபூர்வமாக்கலின் ஒரு நோக்கம் என முன்னாள் வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே கொல்வின், சைட்டம் ஆதரவாளி என சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் பொன்சேகா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; அவர் சைட்டம் ஆதரவாளி, முன்னர் அவர் சைட்டம் குறித்த பிரச்சினையில் வைத்திய சபையின் ஒருமித்த கருத்துகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

Related posts:


சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண...
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது - தொற்று நோயியல் பிரிவு அறிவிப்...
குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது - பிரதமர் மஹிந்த ராஜப...