ஓய்வுபெற்ற ஊழியர்களை அழைக்கிறது மின்சார சபை !

Saturday, September 16th, 2017

மின்சார சபையின் ஓய்வுபெற்ற ஊழியர்களை தற்காலிக அடிப்படையில் சேவையாற்ற வருமாறு இலங்கை மின்சார சபை அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் மின்சார சபையின் அத்தியாவசிய செயற்பாடுகள் மற்றும் மின்தடை பழுதுபார்த்தல்களை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் களப்பணியாளர்கள், தொழில்நுட்பத்துறை மற்றும் சாரதிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள மின்வலு அமைச்சு உத்தேசித்துள்ளது.கடந்த 2014.09.01ம் திகதிக்கு பின்னர் அவ்வாறான துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் சேவைக்கு வருமாறு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

Related posts: