பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள வயல் காணிகளை கையகப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 13th, 2022

நாடளாவிய ரீதியில் பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு 5 வருட காலத்திற்கு கையகப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே

இராணுவத்தினரைக்கொண்டு வெற்று நிலங்களில் விவசாயத்தை தொடங்கப்போவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

விவசாய சபையின் அறிவுறுத்தலுக்கமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

விவசாய சமூகத்துக்கு இலங்கை இராணுவம் தனது அதிகபட்ச ஆதரவினை எப்போதும் வழங்கும் எனவும் உணவு நெருக்கடிக்கு எதிரான தனது போரின் முதல் படியாக, அரசாங்கத்தால் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் இராணுவம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியையடுத்து வெற்று நிலங்களில் பயிரிட அரசாங்கம் மக்களை ஊக்கிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

000

Related posts: