எல்லை மீள் நிர்ணயம் நடந்த பின்பே மாகாண சபைத் தேர்தல் – தேர்தல் ஆணையாளர்

Wednesday, September 27th, 2017

 

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதால், எல்லை மீள் நிர்ணயப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதலில் எல்லை மீள் நிர்ணயத்துக்கான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அது எல்லைகளை வரையறைக்கும் செயற்பாடுகளை நிறைவு செய்த பின்னர், மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லைகளை வரையறுக்கும் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும் என்று நான் நம்புகின்றேன். தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும். “2018 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். இந்தப் பட்டியல், வரும் செப்ரெமபர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது கொரோனா தொற்று : நாளாந்தம் நாடு முழுவதும் 6000 பி.சி.ஆர் பர...
இலங்கையில் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்...
நமது பிள்ளைகள்தான் நாட்டின் எதிர்காலம் - அதை ஆழமாக புரிந்துகொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம் புதிய கல்வ...