இரு நாட்களில் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு –  தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு!

Thursday, January 4th, 2018

இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடத்தில் மாத்திரம் 183,046 டெங்கு நோயாளர்கள் பதிவாகி அவர்களில் 427 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேல் மாகாணத்திலேயே டெங்கு காய்ச்சலால் அதிகளவிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

Related posts: