இன்று முதல் பொலித்தீன் பயன்பாட்டுத் தடை!

Friday, September 1st, 2017

நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டுத் தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் (01) அமுல்படுத்தப்படவுள்ளது.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை வரையறுக்கும் நோக்கில்இத்தடை அமுலுக்கு வருகின்றது.

உணவுப் பொதி செய்ய பயன்படும் லஞ்சீற் உற்பத்தி செய்தல், பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அரசியல், மத மற்றும் கலை நிகழ்வுகளில் பொலித்தீன் பயன்படுத்தி அலங்காரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

பொலித்தீன் பயன்பாட்டை வரையறுக்கும் நோக்கில் இடைக்கால நடவடிக்கைககள், தற்காலிக நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொலித்தீன் பைகளுக்கு பதிலீடாக கடதாசி, ஓலைப்பை மற்றும் துணிப் பை போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - மக்கள் குழப்பமடைய தேவையில்லை ...
பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவி...
சிறுவரிடமிருந்து சிறுவருக்கு கொரோனா பரவுவது மிகவும் குறைவு - சிறுவர் சுவாச சிகிச்சை மருத்துவ நிபுணர...