அமெரிக்க யுத்த கப்பல் இலங்கை துறைமுகத்தில்!

Saturday, October 28th, 2017

32 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக அமெரிக்க வாநூர்தி தாங்கி யுத்த கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் தாக்குதல் கப்பற் படையணி எதிர்வரும் 31ஆம் திகதி வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளது.

தாக்குதல் கப்பற்படையணியில் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், வேக யுத்தக் கப்பலான யு.எஸ்.எஸ் பிரின்ஸ்டன், நாசகாரிக் கப்பல்களான யு.எஸ்.எஸ் ஹவார்ட், யு.எஸ்.எஸ் ஷூப், யு.எஸ்.எஸ் பிங்க்னே, மற்றும் யு.எஸ்.எஸ் கிட் ஆகியன இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இந்த கப்பலில் பல்வேறு பயிற்சி மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.அத்துடன், பாடசாலைகளில் இடம்பெறும் பொது நடவடிக்கைகளில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் அமெரிக்க மாலுமிகளுக்கு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: