புதிய ஆட்சியில் உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் – பூவக்கரை மக்கள் மத்தியில் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
Tuesday, September 3rd, 2019தற்போதைய ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் மக்களின் வரிப்பணத்தில் தமது அரசியல் செயற்பாட்டிற்கான திட்டங்களையே திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
புலோலி மேற்கு பூவக்கரை கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா கடந்த 2019.09.01 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கலைமகள் சனசமூக நிலைத்தலைவர் திரு செ.கிருஸ்ணராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில –
கடந்தகாலங்களில் நாம் எமக்கு கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பரவலாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தோம். அதிலும் குறிப்பாக நாளாந்த வருமானமாக கூலித்தொழிலை நம்பி கொண்டிருக்கும் ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைத் தேடிச் சென்று சேவையாற்றினோம்.
அந்தக் காலப்பகுதியிலேயே ஒரு பகுதியாக எமது பூவக்கரைக் கிராமம் அபிவிருத்தியில் குறித்த வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இக்கிராமத்தின் வளர்ச்சியில் டக்ளஸ் தேவானந்தா மிகவும் அக்கறை கொண்டவராகவே இருந்து வருகிறார்.
ஆனால் தற்போது ஆளும் கட்சியினரின் பிரதமரின் துரித கிராம அபிவிருத்தித் திட்டத்தில் எமது பூவைக்கரைக் கிராமம் திட்டமிட்டு சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
ஒரு கிராம பிரிவில் பல வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்ற காரணத்திற்காகவா இக்கிராமம் புறக்கணிக்கப்பட்டது என்ற மக்களின் ஆதங்கம் நியாயமானது. இன்றும் மூன்று மாதங்களில் புதிய அரசு ஆட்சிபீடம் ஏறும். அப்போது உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் திரு அ.சா.அரியகுமார், பருத்தித்துறை முன்பள்ளி கோட்ட இணைப்பாளர் திருமதி சுரேஸ் சுதாஜினி, அல்வாய் முன்பள்ளி கொத்தனித் தலைவி திருமதி அசோகத் கௌசலியா மற்றும் சமூகமட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|