நல்லூர் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, July 9th, 2019

நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி பொது அமைப்பக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த பிரதேச பொது அமைப்புக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தனது இவ் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதனடிப்படையில் பொற்பதி சனசமூக நிலையம், நேதாஜி சனசமூக நிலையம் , மகாமயி சனசமூக நிலையம் , வளர்பிறை சனசமூக நிலையம் , கலைவாணி சனசமூக நிலையம் ஆகிய சனசமூக நிலையம் ஆகிய பொது அமைப்புக்களுக்கான தளபாடங்களை   கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சனசமூக நிலைய தலைவர் செயலாளர்கள் வட்டார செயலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts: