செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 17 நவம்பர் 2008 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Monday, November 17th, 2008

கௌரவ தவிசாளர் அவர்களே!

நான் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் எமது மக்களின் சார்பாகவே பங்கெடுத்து வருகின்ற காரணத்தினால் அமைச்சராக மட்டுமின்றி தமிழ்பேசும் மக்களி;ன ஜனநாயகப் பிரதிநிதியாகவும் இந்த வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன். நான் கண்களை மூடிக்கொண்டு எதையும் ஆதரிப்பவனும் அல்லன். கண்மூடித்தனமாக எதையும் எதிர்பார்ப்பவனும் அல்லன். நடைமுறை யதார்தங்களுக்கூடாக எதையும் பார்க்க விரும்புவன். மலர்களை குதிரைமீது அமர்ந்திருந்து மட்டும் பார்த்துவிட்டு கருத்துச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.கீழிறங்கி நின்றும் பார்த்துவிட்டுக் கருத்துக் கூறுவதையே நான் விரும்புகின்றேன். தமிழ் பேசும் மக்களி;ன் அரசியலுரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறு நடைபெறச் சாத்தியமான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்திருந்தேனோ? அதே போலவே இந்த வரவு – செலவுத் திட்டத்தையும் நடைமுறை யதார்த்தங்களுக்கூடாகவே நான் பார்க்க விரும்புகின்றேன். உண்மையில் பல்வேறு அணிகளாகக் கூறுபட்டு நின்று இந்த வரவு – செலவுத் திட்டத்தை விவாதிப்பதை நான் விரும்பவில்லை. இந்த வரவு –  செலவுத்திட்டத்தை ஆதரிப்பதோ எதிர்ப்பதா என்ற கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் அப்பால் நின்று இது எத்தகைய சூழலில் தயாரிக்கப்பட்டிருக்கின்றதென்பதையே நான் பார்க்க விரும்புகின்றேன்.

இன்று எமக்கு முன்னால் பாரிய வரலாற்றுக் கடமைகள் விரிந்து கிடக்கின்றன.தமிழ் பேசும் மக்களின் பெயரால் நடத்தப்படுகின்ற அழிவு யுத்தத்திலிருந்து தேசத்தையும் அனைத்து மக்களையும் மீட்பது.எமது மக்களி;ன் அன்றாட அவலங்களுக்குத் தீர்வு காண்பது தேசத்தை அபிவிருத்தி செய்வது அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மாறிவரும் உலகப் பொருளாதார சூழ்நிலைக்கு முகங்கொடுப்பது ஆகிய இவைகள் தாம் இன்று எமக்கு முன்பாக விரிந்து கிடக்கின்ற பாரிய பணிகளாகும். இந்தச் சுமைகளை நாம் சுமந்துகொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில்தான் இந்த வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அரசியலுரிமைப் பிரச்சினையைப் பொறுத்தவரை இலங்கை –  இந்திய ஒப்பந்தத்தோடு இந்தச் சுமைகள் யாவும் எமது தோள்களிலிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டும்.

…. (இடையீடு)

ஆனால்,அது நடக்கவில்லை. அதற்கு பிரதான காரணியாக இருந்தவர்கள் யார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் பேசும் மக்களி;ன அரசியலுரிமைகளுக்காக அன்று ஆயுத மேந்திய போராட்டத்தை வழிநடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன். ஆனாலும் இங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து மாறிவரும் உலக ஒழுங்கின் போக்கை அறிந்து ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு காணலாமென்ற நம்பிக்கையுடன் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியனுப்பியிருப்பவர்கள் நாம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு முந்திய காலங்களில் இலங்கைத் தீவில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் யாவும் தமிழ்பேசும் மக்களுக்கான அரசியலுரிமைப் பிரச்சினையைத் தீர்;த்துவைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அதற்குப் பிந்திய காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ்பேசும் மக்களுக்கான அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்டன. இந்த உண்மையையும் இந்தச் சபையில் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். ஆனாலும் புலித்தலைமை மட்டும் அதைக் கருத்திலெடுக்காமால் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்களை யெல்லாம் சரிவரப் பயன்படுத்தாமல் ஆயுத முறையில் மட்டும் நாட்டங்கொண்டு தமது சுயலாப சம்ராஜ்ய கனவுகளுக்காக எமது தேசத்தைத் தொடர்ந்தும் சுடுகாடாக வைத்திருப்பதற்குப் பிரதான காரணியாக இருந்து வந்திருக்கின்றது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் முதல் பிரமேதாஸ  – புலிகள் பேச்சுவார்ததை சந்திரிக்கா – புலிகள் பேச்சுவார்த்தை ரணில் விக்கிரமசிங்க-புலிகள் பேச்சுவார்த்தை இறுதியாக மஹிந்த ராஜபக்ஷ  – புலிகள் பேச்சவாத்தை  எனத் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கனிந்து வந்திருக்கின்றன. அமைதிப் பேச்சுக்கான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் புலித்தலைமை அர்தமற்ற நிபந்தனைகளை விதிக்கத் திட்டமிட்ட வகையில் மீண்டும் மீண்டும் அழிவு யுத்தத்திற்கான சூழ்நிலைகளையே உருவாக்கி வந்திருக்கின்றது.புலித்தலைமையினர் அமைதிப் பேச்சுக்களுக்காக என்று கூறி ஜப்பான் நோர்வே தாய்லாந்து சுவிஸ் போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்கள் என்ன வாங்கி வந்தார்கள்.கைத்தொலைபேசிகளையும் மீண்டும் போரைத் தொடங்குவதற்கான பணப்பொதிகளையும் தமது உறவினர்களுக்குத் வெளிநாட்டுத் துணிமணிகளையும் ஆடம்பரப் பொருட்களையும் மட்டுந்தான் வாங்கிவந்தார்கள். எமது மக்களுக்குச் சமாதானத்தை உருவாக்கி விட்டு வந்தார்களா? இல்லை. அல்லது அரசியல் உரிமைகளை வாங்கி வந்தார்களா? அதுவும் இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது தான் பிரபாகரனுடன் நேரடியாகவே விரும்புவதாகப் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். எறும்புப் புற்றுக்கள் யானை நுழைந்து கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. நாய் வாலை நிமிர்த்தி வெற்றி கண்டாலும் ஆச்சரியமில்லை. இப்பொழுது பாம்புக்கும் மனிதனுக்கும்கூட திருமணம் நடக்கும் அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவைகூட ஆச்சரியமில்லை. ஆனால் புலித்தலைவர் பிரபாகரன் அரசியல் தீர்வுக்கு வந்தால்தான் ஆச்சரியம்.ஆனால் அவர் அரசியல் தீர்வுக்கு ஒருபோதும் வரப்போவதில்லை. இது நாம் கண்ட அனுபவ உண்மையாகும். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரபாகரனை நோக்கி விடுத்திருந்த கோரிக்கையை நாம் ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகவே பார்க்கின்றோம். நீரின்றி மீன்களால் உயிர் வாழ முடியாது. போரின்றிப் பிரபாகரனால் உயிர் வாழ முடியாது.எனவே ஒரு சமாதான சூழலில் புலித் தலைமையால் உயிர்வாழ முடியாது. ஆனால் தமிழ்பேசும் மக்களின் விருப்பங்கள் வேறு. அவர்கள் அமைதியையும் சமாதானத்தையும் அரசியல் உரிமையினையும் விரும்புகிறார்கள்.

புலித்தலைமையினர் யுத்த நிறுத்த காலத்தில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் போரை தொடங்க ஆணையிடுங்கள் தலைவர் என்ற எழுதப்பட்ட சுலோகங்களை அப்பாவி மக்களின் கைகளில் பலாத்கராமாகத் திணிந்து ஊர்வலங்கள் நடத்தினார்கள். அவர்கள் தாமகவே அழிவு யுத்தத்தை தொடக்கிவைத்துவிட்டு இன்று தாமாகவே யுத்த நிறுத்ததையும் கோரி வருகின்றார்கள். புலித்தலைமை எமது மக்களின் விருப்பங்களுக்கு மாறாக மாவிலாறு அணைக்கட்டை மூடியதன் மூலம் ஆப்பிழுத்த குரங்கு போல் பாரிய யுத்த களத்தைத் திறந்துவிட்டது. இதனால் இன்று அவர்கள் கிழக்கு மண்ணை முற்றாக இழந்ததுடன் வடக்கில் மன்னாரில் தொடங்கி முல்லைத்தீவு வரை ஓடிப்போய் நின்றுகொண்டு யுத்த நிறுத்தத்திற்கு தாம் தயார் என்ற கூறி வருகின்றார்கள். இன்று அரச படையினர் வன்னியை நோக்கி முன்னேறி வருகின்ற போது புலித்தலைமை தாம் மட்டும் பங்கர் மாளிகைக்குள் ஒளிந்து கொண்டு அப்பாவி மக்களை மனித கேடயங்களாக முன்னிறுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது.

இன்று கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற பலரும் பல சந்தர்ப்பங்களில் புலித்தலைமை அமைதிப் பேச்சுவார்த்தை களை முறித்துக்கொண்டபோது தொலைவான்கள் தொடங்கி விட்டார்கள் என்ற தங்கள் மத்தியில் புலித் தலைமையைத் திட்டித் தீர்த்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் இந்த அழிவு யுத்தத்திற்கு அரசாங்கமே காரணம் என்று கூறி தமது சந்தர்ப்பத்தை அரசியலை நோக்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பழைய முகமூடி களை கழற்றி வைத்துவிட்டு இப்போது தமிழ் பேசும் மக்களின் பெயரைக் கூறிக்கொண்டு புதிய முகமூடிகளாக வந்து நிற்கின்றார்கள்.ஆனால் எமக்கு எப்போதுமே முகமூடிகள் இருந்ததில்லை. ஒரே முகம்  – ஓரே கருத்து  – ஓரே குரல் அன்றில் இருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாடுதான்.

13வது அரசியல் யாப்புத் திருத்தத்தின் அடிப்படையிலான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முதற்கட்டமாக முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் தொடர்ச்சியாக இருபது வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வநந்திருக்கின்றோம். இது வரை ஆட்சிக்கு வந்திருந்தவர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டுந்தான் எமது கோரிக்கைகளை ஏற்று இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கான பாதையை திறந்துவிட்டிருக்கிறார். புலித்தலைமையின் பிரச்சினை வேறு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு எனக் கருதியே இந்த அரசயில் தீர்வு முயற்சியில் அவர் இறங்கியிருக்கின்றார். என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்த அரசியல் தீர்வு முயற்சிகளில் குறைபாடுகள் இருக்குமாயின் அல்லது பலவீனங்கள் இருக்குமாயின் அதை நிறைவாகவும் பலப்படுத்தவும் உரிய முறையில்  உழைக்க வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ் பேசும் மக்களின் பெயரால் இந்த பாராளுமன்றத்திற்கு வந்திருப்பவர்களுக்கு உண்டு. ஆனால் அவர்கள் இந்தப் 13வது அரசியல் யாப்புத் திருத்தத்தைத் தொட்டுப் பார்க்க முடியாது. என்ற பொறுப்பற்ற முறையிலே பேசி வருகின்றனர்.அப்படியாயின் இவர்கள் எதைத் தொட்டுப் பார்க்க விரும்புகின்றார்கள்  என்று நான் இந்தச் சபையிலே கேட்க விரும்புகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஓர் அரசியல் தீர்வு யோசனையை பாராளுமன்றத்தில் சமர்பித்து திருத் தத்தையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட பிராந்தியங்களின் சுயாட்சி என்ற அந்தத் தீர்வுத் திட்டத்தை அன்று எதிர்க்கட்சிகள் எதிரிக் கட்சிகளாக நின்ற எதிர்ந்திருந்தன. அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் அவர்களோடு இணைந்;து கொழும்பிலுள்ள தெருக்களில் இறங்கி அந்த அரசியல் தீர்வுத் திட்ட முயற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். தீர்வு நகல்களைப் பாராளமன்றில் வைத்து எரிப்பதற்கும் துணைபோயிருந்தார்கள். அதே தமிழின விரோதிகள் சிலர்தான் இன்று இப்பாராளுமன்றத்திற்குள் தமிழ்பேசும் மக்களி;ன பிரதிநிதிகளாக வந்து நின்றுகொண்ட அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாதென்று பேசி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் கொண்டுவரப்பட்ட  அன்றைய தீர்வுத்திட்டத்தை எதிர்த்து நின்றவர்கள் இன்று புலித் தலைவர் பிரபாகரனின் பங்கர் மாளிகையை நோக்கி அட்டாங்க நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றுவிட்டு புலித்தலைமையின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இங்கு வந்து நிற்பவர்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப்பற்றி உச்சரிப்பதற்கே அருகதையற்றவர்கள் என்பதை நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

ஈ.பி.டி.பி. யினராகிய நாங்கள் என்றுமே தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்குக் குறுக்காக விழுந்து கிடந்ததாக வரலாறு இல்லை. சமாதானத்துக்காகக் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களையும் நாம் வரவேற்றிருக்கின்றோம். அவற்றைச் சரிவரப் பயன்படுத்தியிருக்கின்றோம். எமது மக்களுக்குக் கிடைத்திருந்த அரசியல் தீர்வு முயற்சிகளுக்குத் தடையாக இருந்தது புலித்தலைமையே மட்டுமன்றி புலித்தலைமையின் எடுபிடிகளாகச் செயற்பட்டவர்களும் இன்று வரையில் செயற்பட்டு வருகின்ற புலிகளின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் என்பதை நான் கூறிவைக்க விரும்பகின்றேன். புலித்தலைமையினர் காலஞ்சென்ற மேதகு ஜனாதிபதி பிரேமதாஸ அவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டு வடக்கு – கிழக்கு மாகாணசபையை இலலாதொழிக்க வேண்டுமென்று நிர்ப்பந்தித்திருந்தனர். எமது மக்களுக்கு கிடைக்கவிருந்த மாநில சுயாட்சித் திட்;டமானது புலித்தலைமையின் கபடத்தனத்தாலும் வன்முறையாலும் அழித்தொழிக்கப்பட்டது. இது இன்று புலிகளின் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மற்றும் இங்குள்ள சிலருக்கும் நன்கு தெரியும்.

நான் எமது மக்களின் சார்பாக வெளிப்படையாகவே இன்று அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகித்து வருகின்றேன். ஆனாலும் நாம் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் உரிமைகளுக்குக் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். எமது மக்களுடைய அரசியல் உரிமைகளுக்காவும் தேசத்தின் அபிவிருத்திக்காகவும் எமது மக்களின் அன்றாட அவலங் களைத் தீர்ப்பதற்காகவும் நான் அரசாங்சத்தில் அமைச்சராகப் பங்கெடுத்த வருகின்றேன். புலித்தலைமையின் விசித்திரமான சுயலாப அரசியல் நிலைப்பாட்டை எமது மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தமிழ்பேசும் மக்களை மிரட்டி அவர்ளுடைய வாக்குகளைக் கொள்ளையடித்து தமக்குத் தாமே வாக்களித்து திருகுதாளமிட்டு திருட்டு வாக்குப் போட்டு பாராளுமன்றத்துக்கு வந்திரக்கின்ற புலிக் கூட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அதனைப் புரியாதிருப்பது போன்று பசாங்கு செய்து வருகின்றார்கள். பிரபாகரன் ஒன்றும் ஒன்றும் மூன்று என்று கூறினால் ஆம் தலைவா அதுதான் சரியான பதில் என்று கூறித் தலையை ஆட்டுகின்ற இந்தக் கூட்டமைப்புப் பொம்மைகளுக்கு மக்களுடைய அவலங்கள் குறித்து எவ்விதமான அக்கறையுமில்லை.

…..(இடையீடு)

இரு எழும்பு ஓடு நட என்ற பிரபாகரன்கட்டiளியட்டால் அதனை இந்தப் புலிக்கூட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்து முடிப்பார்கள். புலித்தலைமையினால் கொன்றொழிக்கப்பட்ட அவர்களுடைய தலைவர்களாகிய தமிழ்த் தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் தோழர் பத்மநாபா தோழர் சிறிசபாரத்தினம் அண்ணன் குமார் பொன்னம்பலம் ஆகிய தலைவர்கள் வீதி விபத்தினாலும் பூச்சி பூரான் கடித்ததனாலும்தான் மரணித்தார்க்ள என்ற பிரபாகரன் கூறினால் அதனையும் உண்மைதான் என ஒப்புக்கொள்வதற்கம் இவர்கள் தயாராக இருப்பார்கள். தங்களுடைய இருப்பகை; காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டுக்குச் சென்று இலங்கை அரசை யுத்த நிறத்தம் செய்யமறு வலியுறுத்தும்படி கோருமாறு இவர்களிடம் புலித் தலைமை கட்டiளியட்hல் அதனைத் தலைமேற்கொண்டு செயற்படுவார்கள்.தமிழ் நாட்டு உறவுகள் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு அனுப்புவதாகக் கூறினால் உணவல்ல. புலித் தலைவரைக் காப்பாற்ற யுத்த நிறுத்தம்தான் என்பார்கள்.

புலித்தலைமை கூறுகின்ற இறந்த யுத்த நிறுத்தக் கொரிக்கையின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. பலமாக இருக்கும்போது போர் பிரகடனம் பலவீனமாக இருஃக்கும்போது யுத்தநிறத்தம் இதுவே பிரபாகரனின் வரலாறாக இருந்து வருகின்றது. யுத்த நிறத்த காலத்தில் ஏன்  என்று கேள்வி கேட்டவர்கள் அவர்களுடன் ஒத்துப்போக மறுத்தவர்கள் கட்டாய வரி செலுத்த மறுத்தவர்கள கட்டாய வரி செலுத்த மறுத்தவர்கள் தமது சிறார்களை  ஆயதப்பயிற்சிக்கு அனுப்புவதற்கு மறுத்த பெற்றோர்கள் என எமது மக்களையே கொன்றொழித்து வந்தவர்கள் புலித்தலைமையினர் . நூற்றக்கணக்கான மாற்றக் கட்சி உறுப்பினர்களை யுத்த நிறத்த காலத்தில் சட்டுச் சரித்தவர்கள் புலித்தலைமையினர். ஒரு தமிழ் பிஞசுக் குழந்தைக்கு முன்னால் அதன் தந்தையைச் சுட்டுச் சரித்தவிட்டு நாங்கள் என் அப்பாவை சுட்டுவிட்டோம் அம்மாவிட்ம் போய்ச் சொல் என்ற சொல்லியனுப்பிய தமிழினத் துரோகிகள் தான் புலித்தலைமையினர். தமிழ் முஸ்லிம் சிங்கள அப்பாவி மக்கள் பலரை யுத்த நிறுத்த காலத்தில் கொன்றொழித்து தங்களுடைய வெறியைத் தீர்த்துக்கொண்ட மனிதகுல  விரோதிகள் தான் புலித்தலைமையினர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைச் சிதைத்து பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றொழித்த புலித்தலைமைக்காக புலிகளின் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதே இந்தயிhவிடம் போய் நின்ற ஆதரவு தாருங்களென்று எந்த முகத்தோடு கேட்கின்றார்கள்? இவர்கள் யுத்த நிறுத்தம் கொருவது  எமது மக்களைக் காப்பாற்றவதற்காக இல்லை. புலித்தலைவர் பிரபாகனைக் காப்பாற்வதற்காகவே. புலித்தலைமைக்குத் தலையாட்டும் புலிக்கூட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான் பகிரங்கமாக ஒரு விடயத்தைக் 4ற விரும்புகின்றேன். பிரபாகரன் அன்ட் கோ வின் சுயலாப அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு இங்கே இனி இடமில்லையென்றுபிரபாகரனிடம் போய்ச் சொல்லங்கள். இலங்கைத்தீவிலும் இந்தியாவிலும் சர்வதெச அரங்கிலும் அரசியல் மாற்றங்கள் நிகழவேண்டுமென்றும் அதற்கூடாகத் தாம் தப்பிப்பிழைத்து மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டுமென்றம் புலித்தலைமை கனவு காண்கிறது. அரசியல் மாற்றம் எங்கு நிகழ்ந்தாலும் புலித்தலைமையின் போக்கில் மாற்றங்கள் நிகழாதவரை புலித்தலைமையின் விடயத்தில் எந்த நாடும் எந்தக் கட்சியும் இதே நிலைப்பாட்டையேதான் கடைப்பிடிக்குமென்ற பிரபாகரனிடம் போய்ச் சொல்லுங்கள்.

(இடையீடு) என்;ன சொல்கிறீர்கள்?( இடையீடு)

பொறுத்திருந்து பார்க்கலாம்.. இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் கூறிவைக்க விரும்புகின்றேன். இன்று இலங்கை ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலாவோ அல்லது மகாத்மகாந்தியோகூட இருந்திருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டையே அவர்களும் எடுத்திருப்பார்கள். ஏனென்றால், உலகின் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும்கூட புரிந்திருக்காத மிக மோசமான கொடுமைகளைப் புலித்தலைமை புரிந்து வந்திருக்கின்றது. புலித்தலைமை நடந்து வந்த பாதையை ஒரு கணம் அனைவரும் திரும்பிப் பாருங்கள். அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்கள் பிரபாகரனுடன் சமகாலத்திலிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான சக இயக்கப் போராளிகள் புத்திஜீவிகள் விரிவுரையாளர்கள் கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் அப்பாவி தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இந்த நாட்டு ஜனாதிபதி அயல்நாட்டுப் பிரதமர் உள்@ராட்சி சபைத் தலைவைர்கள் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பெண்ணிலைவாதிகள் மற்றும் கலைஞர்கள் என மனிதகுலத்தின் குரல்வளையே அறுத்துப்போட்ட வரலாறு தான் புலித்தலைமை நடந்து வந்த பாதையெங்கும் எஞ்சியிருக்கின்றது.

இலங்கை – இந்தியா ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது முதல் இன்று வரை தமிழ்பேசும் மக்கள் அழிவுகளையும் அவலங்களையும்  சந்தித்து வருவதற்கு புலித்தலவைர் பிரபாகரனே காரணமானார். இலங்கை – இந்திய ஒப்பந்த காலம்வரை கொல்லப்பட்டிருந்த புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 652பேர் மட்டுந்தான். ஆனால் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து நாசப்படுத்தி இன்று வரை புலித்தலமையால் நடாத்தப்பட்ட அழிவு யுத்தத்துக்குப் பலிகொடுக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கையோ 22000ஐயும் தாண்டிவிட்டது. அரசியல் தீர்வுக்கு விருப்பமின்றி அழிவ யுத்தத்தில் மட்டும் புலித்தலைமை நாட்டங்கொண்டதால் இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னர் சுமார் 21000க்கும் அதிகமான தமது உறுப்பினர்களை அவர்கள் அநியாயமாகப் பலிகொடுத்திருக்கிறார்கள்.நிலங்களை இழந்து வளங்களை இழந்து இருந்ததையும் பறிகொடுத்து சமாதானத்துக்காகக் கிடைத்திருந்த சந்தர்ப்பங்களையும் திட்டமிட்டே தவறவிட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் அழிவுகளுக்கும் தமிழ் இளைஞர் – யுவதிகளுக்கும் சக இயக்க உறுப்பினர்களுக்கும் மாற்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் தமிழ் தலைவர்களினதும் இழப்புகளுக்கும் காரணமாக இருந்துவரும் புலித்தலைவர் பிரபாகரனே தமிழனத்தின் துரோகி என்பதுதான் உண்மை. அப்பாவி முஸ்லிம் சகோதர மக்களையும் அப்பாவி சிங்கள சகோதர மக்களையும் கொன்று குவித்த இன மத சமூக ஐக்கியத்துக்குப் புதைகுழி தோண்டி விட்டிருக்கும் புலித்தலைமையை மனித குலத்தின் விரோதி என்றே உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது. செய்த தவறுகளுக்கு பிராயச் சித்தமாக பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அல்லது கொல்லப்படல் வேண்டும். (இடையீடு) அதனை ஆமோதிக்கிறீர்கள் போலிருக்கிறது. இதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருப்பவரே பிரபாகரனேதான். பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது என்ற நிலைமையும் பிரபாகரனே உருவாக்கிவிட்டிருப்பதை முழு உலகமுமே இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. புலித்தலைமை தம்மிடம் இருந்த பலத்தை அல்லது ஆயுதத்தை இன்றுவரை தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்காகப் பயன்படுத்தியிருந்த வரலாறு இருந்தால் யாராவது கூறுங்கள். ஆனால் புலித் தலைமை தமது ஆயுதத்தையும் பலத்தையும் அழிவுகளுக்காகவே பயன்படுத்தி வருகின்றது.

       நந்த வனத்தில் ஓர் ஆண்டி

       அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

       கொண்டு வந்தான் ஒரு தோண்டி

       அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

என்பது போல் இன்று பிரபாகரன் தான்விட்ட தவறுகளுக்கான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதை முழு உலகமுமே பார்த்துக் கொண்டிருக்கின்றுது. உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவிவிட்டவை அல்ல. அவை நீயாகவே உனக்குத் தூவிவிட்டவை.

இன்று எமது நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற சூழலைப் பற்றியே நான் இந்தச் சபையில் கூறினேன். இத்தகைய ஒரு சூழலில்தான் இந்த வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய உலகமயமாக்கலை எதிர்த்துநிற்கும் சக்தி எமது இலங்கை போன்ற 3ம் உலக நாடுகளுக்கோ அல்லது வளர்ந்து வருகின்ற நாடுகளுக்கோ இல்லை. அதேவேளையில் உலகமயமாக்கலுக்கான கதவை நாம் முழுமையாகத் திறந்து விடவும் முடியாது. நாம் மாறிவரும் உலகின் போக்கை உணர்ந்து உலக ஒழுங்கை அனுசரித்து எமது தேசத்தின் உள்ள+ர் உற்பத்திகளை ஊக்குவித்தேயாக வேண்டும். அதேநேரம் எமது தேசத்தின் மனித உழைப்பையும் வளங்களையும் எமது தேசத்திற்காகவே பயன்படுத்தும் உயரிய சிந்தனை எமக்கிருக்க வேண்டும். எனவே அதற்கான கணிசமான அளவு ஏற்பாடுகள் இந்த வரவு செலவுத் திட்டத்திலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்களின் உரிமைப் பிரச்சினையைக் காரணம் காட்டி அரசியல் தீர்வுக்கு விருப்பமின்றிப் புலித் தலைமையால் தொடரப்படும் இந்த  அழிவு யத்தத்தினால் எமது உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதால் இன்றுவரை பல்வேறு தடைகள் இருந்து வருகின்றன. எனவே முதலில் இந்தச் சூழ்நிலையை நாம் மாற்றியமைப்போம். பிறகு யுத்தமற்ற சூழலில் இன்னோர் ஆண்டில் இதைவிடவும் முன்னேற்றகரமான ஒரு வரவு – செலவுத் திட்டத்தை உருவாக்குவோம். நான் புலித் தலைமையின் பிரச்சினைகள் வேறு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு என்று பிரித்துப் பார்ப்பது போல் மூளைச் சலவை செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் வேறு புலித்தலைமை வேறு என்றும் பிரித்துப் பார்க்க விரும்புகின்றேன். இன்று பலாத்காரமாகப் பிடித்துச் செல்லப்பட்டு கட்டாய ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு புலித் தலiமையின் அழிவு யுத்ததில் இணைக்கப்பட்டிருப்பவர்களும் எமது மக்களின் பிள்ளைகள்தாம் இவர்கள் மனந்திருத்தி புலித்தலைமையின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு புலித்தலைமையைவிட்டு பிரிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்றே நான் எதிர்பார்க்கின்றேன். ஜனாதிபதி அவர்கள் ஜனநாயக வழிக்கு வருகின்ற புலி உறுப்பினர்களுக்காகவும் வடக்கின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் மூவாயிரம் மில்லியன் ரூபாய்க்கு மேலான தொகையை ஒதுக்கீடு செய்திருக்கின்றார். ஆனால் இது புலித்தலைமை கூறும் சுடுகாட்டுக்கு வழிகாட்டும் திட்டமல்ல. கிழக்கில் உருவானது உதயம். வடக்கில் வரப்போவது வசந்தம். இது மொத்;தத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு உதய வசந்தம். தென்னிலங்கைச் சகோதர மக்களுக்குச் சுகந்தம். உதயமும் வசந்தமும் சுகந்தமும் இன மத சமூக ஐக்கியத்தைப் பலப்படுத்தும் என்பது எனது நம்பிக்கையாகும். ஆகவே இன்றைய சூழலை உணர்ந்து நான் வரவு – செலவுத்திட்டத்தை ஆதரித்தேன்.

இந்த வேளையில் ஒரு நற்செய்தியையும் நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன். அதாவது யாழ் குடாநாட்டு மக்களை ஏனைய பிரதேச மக்களுடன் நிலத் தொடர்பால் துண்டித்து வைத்திருந்த பாதைகளில் ஒன்றான ஏ32 பூநகரிப் பாதை புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தப்  பாதை மக்களின் போக்குவரத்துக்காகவும் உணவு மற்றும் அத்தியாவசிப் பொருட்களின் சுலபமான விநியோகத்திற் காகவும் விரைவில் திறந்துவிடப்படவுள்ளது என்று கூறிக்கொள்வதோடு  இதனால் நன்மையடையப்போகும் எமது மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்வதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் இந்தப் பாராளுமன்றத்தினூடாகக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்;களுக்கு எமது மக்களின் சார்பாக மனிதபிமான வேண்டுகோளை விடுக்கின்றேன். அதாவது நாற்பதாயிரம் சவப் பெட்டிகளைத் தயாராக வைத்திருங்கள் என்ற பாராளுமன்றில் யுத்தப் பிரகடனம் செய்தவர்கள் நீங்கள் இவ்வாறு வீரவேசமாகப் பேசிவிட்டு வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் போயிருந்தீhகள். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது. யுத்தப் பிரகடனம் செய்த நீங்களும் எமது மக்களின் மத்தியில் நின்று அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு நீங்களாகவே வாக்களித்து தவறான முறையில் பாராளுமன்றம் வந்திருக்கிறீர்கள் என்பது வேறு விடயம். ஆனாலும் உங்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காகப் பயன்படுத்துங்கள். அரசியல் தீர்வுக்காகப் பயன்படுத்துங்கள். எமது மக்கள் மத்தியில் எம்முடன் இணைந்து அவர்களின் துயர்துடைக்க முன்வாருங்கள். மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிப் பேச்சவார்த்தைக்கு வருமாறு புலித்தலைமையிடம் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.சமாதானத்தையும் அமைதியையும் அரசியல் தீர்வையும் அச்சமற்ற வாழ்வையும் படுகொலைகள் இல்லாத ஒரு சூழலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எமது மக்களின் சார்பாக கேட்;கின்றேன். உங்களால் முடிந்தால் புலித்தலலைமையை வன்முறையைக் கைவிடச்செய்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வாருங்கள். இல்லையெனில் புலித்தலைமையின் அழிவு யுத்த பாதைக்கு துணைபோகாமல் வீராவேசமாக அறிக்கை விடுத்துக் காலந்தள்ளும் வழிமுறைகளைக் கைவிட்டு நீங்களாகவே அரசியல் தீர்வைப் பலப்படுத்துவதற்கு முன்வாருங்கள். முதற்கட்டமாக இலரங்கை – இந்திய ஒப்பறந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து நாம் சமாதானத்தையும் அமைதியையும் நிரந்தர நிம்மதியையம் நோக்கிச் செல்வோம் இதுவே நடைமுறைச் வழிமுறையாகும். இந்த வழிமுறை தவிர்ந்த நடைமுறைச் சாத்தியமற்ற வேறெதனையும் தீர்வாகக் கூறுபவர்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விருப்பமற்றவர்கள் என்பதே அர்த்தம்.

இன ஐக்கியத்துக்காக உழைப்போம். இன சமத்துவத்துக்காக உழைப் போம். அரசியல் உரிமைச் சுதந்திரத்துக்காக உழைப்போம். என்றும் நாம் மக்களுக்காக தேசத்துக்காக தியாகங்களை ஏற்போம் நன்றி.

17 நவம்பர் 2008

Related posts:


செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க மு...
தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நில...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...