87 இந்தியர்களை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான்

Tuesday, March 8th, 2016

சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை  அடிக்கடி கைது செய்து வருகிறது. அதேபோல், வழிதவறி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுவிடும் இந்தியர்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்கின்றனர்.இவ்வாறு கைது செய்யப்படும் இந்தியர்கள் அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள லாந்தி சிறையில் வாடிய இந்தியர்கள் 87 பேரை பாகிஸ்தான் நேற்று விடுவித்தது. இவர்களது ஆவணங்களை சரிபார்த்த பின்னர் இன்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தானின் எல்லைப்பாதுகாப்பு படையினர் 87 பேரையும் ஒப்படைத்தனர்.  வரும் மார்ச் 20 ஆம் தேதி மேலும் 86 மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: