2 ஆண்டுகளுக்கு பின்னர் மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!

Friday, October 7th, 2016

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ‘எம்.எச்.370’ ரக விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.

ஆனால் அது என்ன ஆனது என தெரியவில்லை. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன என்றும் அறிய முடியவில்லை. எனவே விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்ததாக மலேசிய அரசு அறிவித்தது.

இந்திய பெருங்கடல் மீது பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இந்திய பெருங்கடலின் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் விமானம் மாயமான 2 ஆண்டுகளுக்கு பிறகு அதன் உதிரி பாகம் கடந்த மே மாதம் மொரீசியசில் கிடைத்துள்ளது. அது மாயமான மலேசிய விமானத்தின் இறக்கை பகுதி என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சோதனையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத் தகவலை மலேசிய போக்குவரத்து மந்திரி லியோ தியோங்லாய் அதிகார பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு (2015) பிரான்சின் ரீயூனியன் தீவிலும், தான்சானியாவின் பெமா தீவிலும் தலா ஒரு உதிரிபாகம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

201610071202475500_Malaysian-plane-Part-found-mauritius-hide-invention-After-2_SECVPF

Related posts: