வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Tuesday, May 3rd, 2016
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், நேற்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும், ஏப்ரல் 22ம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, 29ம் திகதிநிறைவு பெற்றது.

மொத்தம் 795 பெண்கள், நான்கு திருநங்கையர், 6,352 ஆண்கள் என மொத்தம், 7,151 பேர் மனு தாக்கல்செய்தனர்.

மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, 3,023 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.4,128 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள்.

நேற்று மாலை 3:00 மணியுடன், வாபஸ் பெறும் நேரம் நிறைவடைந்தது. மொத்தம் 337 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

தேர்தல் கமிஷன் இணையதளத்தில், இரவு 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின்படி,320 பெண்கள் உட்பட, 3,795 பேர் களத்தில் உள்ளனர்.

Related posts: