வெடிக்கத் தொடங்கிய மெக்ஸிகோவின் எல் போபோ !

Sunday, August 16th, 2020

மெக்ஸிகோவில் உள்ள எல் போபோ எரிமலை சாம்பலையும், புகையையும் அதிக அளவில் வெளியேற்றி வருவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளாதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த எரிமலை 36 முறைக்கும் அதிகமாக சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவின் அடையாளமாகக் கருதப்படும் இந்த எரிமலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெடிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் ஆயிரத்து 968 அடி உயரத்திற்கு சாம்பலையும், புகையையும் எல் போபோ எரிமலை வெளியேற்றி வருகிறது.

இதனைத் தொடர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெக்ஸிகோவின் பேரிடர் தடுப்புக்கான தேசிய மக்கள் மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: