வலுவான நிலையில் இலங்கை!

Saturday, September 30th, 2017

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்ததுள்ள நிலையில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 419 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 155 ஓட்டங்களை பெற்றார்.இதேவேளை, திமுத் கருணாரத்ன 93 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 83 ஓட்டங்களையும் பெற்றனர்.இன்று தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டநேரம் நிறைவடையும்வரையில் எந்த விக்கட் இழப்பும் இன்றி 64 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Related posts: