வடகொரிய தலைவர் தொடருந்தில் சீனாவுக்கு பயணம்!

Thursday, January 10th, 2019

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு திடீர் விஜயம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு சென்றார். கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக கிம் ஜாங் அன் திடீர் பயணமாக சீனா சென்றிருப்பதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும், ரயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

Related posts: