துருக்கி விமானப்படைக்கு 100 மில்லியன் பவுண்ட்களை வழங்க பிரித்தானியா இணக்கம்!

Monday, January 30th, 2017

துருக்கியின் போர் விமானங்கள் உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் துருக்கி விமானப்படைக்கு சுமார் 100 மில்லியன் பவுண்ட்களை வழங்க முன்வந்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தையீப் ஏர்டோகன் ஆகியோருக்கு இடையில் அங்காராவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே, இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ‘உலகளாவிய ரீதியில் பாரிய வர்த்தகத்தில் பிரித்தானியா ஈடுபடுகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், இனிவரும் காலங்களில் துருக்கியுடனான வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். தெரசா மேயைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த துருக்கி ஜனாதிபதி தையீப் ஏர்டோகன், பிரித்தானியாவுடனான வர்த்தக உறவுகளை 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த வர்த்தக நடவடிக்கைகள் மூலம், பிரித்தானியா மற்றும் துருக்கிக்கு இடையிலுள்ள பாதுகாப்பு மற்றும் நட்புறவுகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_93859015_9a99ea12-be8d-477f-94b5-d9c835d8e502

Related posts: