வடகொரியாவில் முக்கிய அமைச்சருக்கு மரண தண்டனை?

Wednesday, August 31st, 2016

கடந்த மாதத்தில் வடகொரியாவின் உயர்நிலை அமைச்சர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை வழங்கப்பட்ட கிம் யோங்-ஜின், வடகொரியாவின் துணை பிரதமர்களில் ஒருவராகவும், நாட்டின் கல்வித்துறைக்கு பொறுப்பு வகித்து வந்ததாக தென்கொரியாவின் ஐக்கிய அமைச்சரவை தெரிவித்துள்ளது.

ஆனால், தங்களுக்கு எவ்வாறு இந்த தகவல் கிடைத்துள்ளது என்பதனை தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.இக்குற்றச்சாட்டுகள் குறித்து வடகொரியா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வடகொரியா அதிபராக கிம் ஜாங்-உன் பொறுப்பேற்றதிலிருந்து பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts: