இந்தியர் உட்பட 10 பேரது மரண தண்டனை திடீர் நிறுத்தம்?

Friday, July 29th, 2016

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதில் இந்தோனேசியா விடாப்பிடியாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ ஜூடோடோ இதில் சமரசம் செய்து கொள்வதே இல்லை.அந்த வகையில் அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் 14 பேரில் வெளிநாட்டினர் பெரும்பாலனோர் அடங்கியிருந்தால் இந்த விவகாரம் உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மரண தண்டனை விதிக்கப்படுவோரில்  பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த குர்தீப் சிங் என்பவரும் இடம் பெற்றிருந்தார்.2004 ஆம் ஆண்டு ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட அவருக்கு 2005-ம் ஆண்டு  மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தபோது, குர்தீப் சிங்கின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று பாகிஸ்தானை சேர்ந்த ஜூல்பிகர் அலி, நைஜீரியாவை சேர்ந்த 8 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் என மேலும் 13 பேருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. குர்தீப் சிங்குடன் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முதலில் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், இந்தோனேஷியா 4 பேருக்கு மட்டும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது.  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டோரில் 3 பேர்  வெளிநாட்டினர்கள் ஆவர். ஒருவர் இந்தோனோஷியாவை சேர்ந்தவர். இந்தியரான குல்தீப் சிங் உட்பட ஏனைய 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இவர்களுக்கு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணம் எதுவும்  தெரியவில்லை. மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த சிறை அமைந்துள்ள இடம் பெரிய அளவிலான புயலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ரு தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: