வடகொரியாவின் போக்கு மிக ஆபத்தானது – டிரம்ப்!

Friday, July 7th, 2017

வடகொரியாவின் நடவடிக்கைகளை மிகவும் உறுதியாக எதிர்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரியாவின் ஆயுததிட்டங்களிற்கான விளைவுகள் உண்டு என்பதை அந்த நாட்டிற்கு உணர்த்துமாறு உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

போலந்து ஜனாதிபதியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தவேளையே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். வடகொரியா ஓரு அச்சுறுத்தல் அதனை நாங்கள் உறுதியாக எதிர்கொள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள டிரம்ப் நடவடிக்கைகளிற்கான எல்லைக்கோடுகள் எதனையும் விதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். வடகொரியா மிகவும் ஆபத்தான விதத்தில் நடந்து கொள்கின்றது அதனால் ஏதாவது செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: