ரஷ்ய அதிபர் புட்டின் கார் விபத்து: வாகன ஓட்டுனர் ஸ்தலத்திலேயே பலி?

ரஷ்ய அதிபர் அடிக்கடி பயணிக்கும் அவரது BMW குண்டு துளைக்காத கார் நேற்றைய தினம் விபத்தில் சிக்கியதில் வாகன ஓட்டுனர் பலி. சதிச் செயலா என சந்தேகம்!
ஆனால் அந்தவேளை அதில் ரஷ்ய அதிபர் புட்டின் பயணிக்கவில்லை. குறித்த BMW கார் வேகமாகச் சென்றுகொண்டு இருந்தவேளை எதிரில் வந்த மேசடிஸ் கார் ஒன்று மோதியுள்ளது. இதனால் அதிபரின் கார் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, உடனடியாகவே அதன் ஓட்டுனர் இறந்துள்ளார். அதிபர் புட்டினின் அபிமானத்துக்குரிய ஓட்டுனரே இவ்வாறு இறந்துள்ளார்.
இது வெளிநாட்டு உளவு நிறுவனத்தின் சதிச்செயலாக இருக்க கூடும் என்று கே.ஜி.பி கருதுவதால் பெரும் எடுப்பிலான விசாரணைகள் தற்போது முடிக்கிவிடப்பட்டுள்ளது.அதிபர் புட்டின் தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால். அவர் குறித்த வாகனத்தை பாவிக்கமாட்டார். எனவே அந்த வாகனத்திற்கு பொலிசார் பாதுகாப்பும் இருக்காது. எவனே இவை அனைத்தையும் நன்றாக அறிந்து காரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அதிபர் புட்டின் பாவிக்கும் கார் மீது மோதிய மற்றைய கார் மிக மிக வேகமாக வந்துள்ளதும் பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள்.
Related posts:
|
|