ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை – நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதில்லை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,தெற்கு கெரோலினாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு சென்றால், நேட்டோ அமைப்பில் இருந்து விலக போவதாக கூறியுள்ள அவர், நேட்டோ அமைப்புக்கு போதிய நிதியை வழங்காதது சம்பந்தமாக அதன் ஐரோப்பிய உறுப்பு நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக நேட்டோ அமைப்பின் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன கடும் குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

தெற்கு கெரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ட்ரம்ப், நேட்டோ உறுப்பு நாடொன்றின் தலைவருடன் மேற்கொண்ட உரையாடல் பற்றி குறிப்பிட்டதுடன் அந்த தலைவர் யார் என்ற தகவலை வெளியிடவில்லை.

 “உலகில் மிகப் பெரிய நாடு ஒன்றின் ஜனாதிபதி ஒருவர் என்னிடம் இப்படியான கேள்வி ஒன்றை கேட்டார், சேர் நாங்கள் நேட்டோவுக்கு நிதியை செலுத்தாததால், ரஷ்யா எம்மை தாக்கினால், நீங்கள் எங்களை பாதுகாப்பீர்களா என்று.

அதற்கு உங்களை பாதுகாக்க போவதில்லை என நான் பதிலளித்தேன். உண்மையில் உங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்கு தேவையானவற்றை செய்துக்கொள்ள நான் அவர்களை ஊக்குவிப்பேன்.அத்துடன் நீங்கள் உங்கள் கடனை செலுத்த வேண்டும்” என கூறியதாக டரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த கருத்தை நேட்டோ உறுப்பு நாடுகள் கடும் அதிருப்தியுடன் கண்டித்தன.

இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பைடனின் அரசாங்கம் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு புதிய உதவிகளை வழங்க புதிய சட்டமூலத்தை அடுத்த வாரம் அமெரிக்க காங்கிரஸில் தாக்கல் செய்ய உள்ளது.

பைடனை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டொனால்ட் ட்ரம்ப், அந்த சட்டமூலத்தை தோற்கடிக்குமாறு குடியரசு கட்சியினருக்கு அழுத்தம் கொடுத்த பின்னரே ஐரோப்பிய நாடுகள், உக்ரைளுக்கான இந்த நிதியை ஒதுக்கியுள்ளன.

 “எமது நட்பு நாடுகளை ஆக்கிரமிப்பதற்கான அழைப்பை விடுப்பது “பயங்கரமான முன்னறிவிப்பு” என இது குறித்து பதிலளித்திருந்த வெள்ளை மாளிகை தெரிவிததிருந்தது.

இதேவைளைஅமெரிக்க காங்கிரஸூக்குள் தடுக்கப்பட்ட உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு மேலதிகமாக தாய்வானுக்கு வழங்கப்பட உள்ள 95 பில்லியன் போர் உதவி தொடர்பான விவாதம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கு அமெரிக்க தொடர்ந்தும் உதவி வழங்குவதை நிராகரித்துள்ளதுடன் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், நேட்டோ அமைப்பில் இருந்து விலக போவதாகவும் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் எச்சரித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பேரவை தலைவர் சார்ள்ஸ் மைக்கல், ட்ரம்பின் கருத்து, கவனக்குறைவான மற்றும் முட்டாள்த்தனமான கருத்து எனக்கூறியுள்ளார்..

எது எப்படி இருந்த போதிலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் தேசியவாத பொருளாதார யோசனைகளுடன் ஒப்பிடும் போது ஜோ பைடனின் 11 விடயங்கள் முன்னணியில் இருப்பதாக Financial Time பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆனாலும் அமெரிக்க வாக்காளர்களில் 42 சதவீதமானவர்கள், பொருளாதார துறையில் ட்ரம்ப் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் கடுமையான சீன எதிர்ப்பு கொள்கையை கையாண்டார். உலக பொருளாதார அமைப்பின் நிபந்தனைகளை மீறி, சீன இறக்குமதி பொருட்களுக்கு புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: