யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருகோடி மக்கள் பாதிப்பு :15 இலட்சம் பேர் வெளியேற்றம்!

Thursday, May 27th, 2021

யாஸ் சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில்  சுமார் ஒரு கோடி மக்கள் தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அதேவேளை 1500,000 பேர்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த சூறாவளியின் தாக்கத்தால் 300,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 134 கட்டுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளியானது விவசாய நிலங்கள் , மீன்வளம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிற்கு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால் சுமார் 20,000 மண் வீடுகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் சேதமடைந்தாக தெரிவித்தார்.

வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை உருவான யாஸ் புயல், தொடர்ந்து அதி தீவிரமான புயலாக வலுவடைந்ததுள்ளது. நேற்று புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது.

முதலில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் பின்னர் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. பிற்பகல் 12.30 மணியளவில் புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது.

அப்போது மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கரையைக் கடந்த புயலின் வேகம் குறைந்து வலுவிழந்தது.

புயல் கரையைக் கடந்தபோது பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள், திகா, கிழக்கு மெதினிபூர் மற்றும் நந்திகிராம் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சியளித்தன.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும்  கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் இரவு 7.45 மணி வரையிலும், பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரையிலும் மூடப்பட்டுள்ளது.

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் விமான நிலையம் வியாழக்கிழமை இரவு 7.45 மணி வரை மூடப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் துர்காபூர் மற்றும் ரூர்கேலா விமான நிலையங்கள் இன்று மூடப்படும். இந்திய ரயில்வே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் நீண்ட தூர புகையிரதங்கள் மாத்திரம் சனிக்கிழமை வரை கொல்கத்தா மற்றும் தென் மாநிலங்களுக்கு பயணிக்கும் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை நிலச்சரிவுகள் தற்போது குறைந்துள்ள நிலையில் இன்று கம் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் அரக்கோணத்திலிருந்தும் நிவாரணப் பொருட்களுடன், விமானப் படை விமானத்தில் மீட்புப்படையினர் சென்றுள்ளனர்.

Related posts: