மெக்சிகோவில் நிலநடுக்கம்! 

Saturday, February 17th, 2018

தெற்கு மெக்சிகோவில் இன்று பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் மெக்சிகோவில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஒவஸ்சாகா நகரங்களின் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும் , இதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்த இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Related posts: