முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து!

Tuesday, January 14th, 2020

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை இரத்து செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசதுரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், அவரது மரண தண்டனை இரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது.


வங்கதேசத்தில் கணனி வழியாக ரூ.535 கோடி திருட்டு!
மாலைதீவு அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவுக்கும் ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலை!
பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!
வெளியானது நீட் தேர்வு முடிவுகள் – மாணவர்கள் பலர் அதிர்ச்சி!
வடகொரியா சைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு..!