மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து!

Friday, December 28th, 2018

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குறித்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.

Related posts: