மாலியில் கொலைவெறித் தாக்குதல் – 41 பேர் கொலை!

Thursday, June 20th, 2019

மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன.

இந்நிலையில், குறித்த சம்பவத்துக்கு உள்ளூரில் இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்காத நிலையில், இது பயங்கரவாதிகளின் சதிச்செயல் என அரசு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: