மண்சரிவு – கொலம்பியாவில் 17பேருக்கும் அதிகமானோர் பலி !

Wednesday, April 24th, 2019

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வீடுகள் கொண்ட தொகுதியில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பலர் மண்சரிவிற்குள் புதையுண்ட நிலையில், 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிலர் மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts: