போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் – பிரான்சில் போராட்டம் தீவிரம்!

Sunday, December 9th, 2018

பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. .

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது.

இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்சில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்பட்டுள்ள நிலையிலும், அங்கு பாதுகாப்பு பணிக்காக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: