வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது நீடிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Thursday, July 1st, 2021

அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று 30 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் மூலம் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பில் செய்யப்பட்ட திருத்தம் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அரச சேவையில் அனைத்து தரங்களின் வைத்திய அதிகாரிகளுக்குமான கட்டாய ஓய்வு வயது 60 ஆக காணப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டு 61 ஆக நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே வைத்தியர்களின் தற்போது ஓய்வுபெறும் வயது 63 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: