போதைப் பொருள் கடத்துவோரை தண்டிக்குமாறு தன்சானிய ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு!

Wednesday, February 8th, 2017

போதைப் பொருள் கடத்துவோரை தண்டிக்குமாறு தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி (john magufuli ) அந்நாட்டு படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படாது என அறிவித்துள்ள அவர் சிரேஸ்ட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி  ஜோன் மகுபுலி   2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் மோசடிகள், கறுப்புப் பணம் போன்ற குறித்து நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்கத்கது. தனது மனைவி ஜெனத் இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருந்தாலும் பக்கச்சார்பின்றி கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

John-Magufuli

Related posts: