பொலிஸாருக்கு இராணுவ துப்பாக்கிகள்!

Monday, June 26th, 2017

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கு துணை புரியும் வகையில் ஒட்டாவாவில் விமான நிலையப் பகுதிக்கான சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாரக்கு நவீனரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஜூலை 1ஆம் திகதி கனேடிய தேசிய தின கொண்டாட்டங்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கு பாதுகாப்பு வழங்கும் முகமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் முதலாம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் விடுமுறைகளைத் தவிர்த்துவிட்டு கடமைக்கு சமூகளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

Related posts: