இந்த மாத இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு நீங்கும் : நிதித்துறை அமைச்சர்!

Saturday, December 3rd, 2016

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மத்திய அரசால் திடீரென இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சனை இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும் என்று நாட்டின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், புதிய மற்றும் மாற்று ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டு பிறகும் கூட, புழக்கத்திலுள்ள பணத்தின் மதிப்பு முன்பைவிட மிகவும் குறைவாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 250 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நோட்டுக்கள் திருப்பிப் பெறப்பட்டதை தொடர்ந்து, பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நோட்டுக்களை நம்பியிருந்த பல இந்தியர்களுக்கு இது குழப்பத்தை விளைவித்தது.கடந்த ஞாயிறன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியர்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தழுவி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

_92800780_gettyimages-623157734

Related posts: