பெண்கள் தேசத்தின் தாய்மைக்கான பரிசு – ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்து!
Saturday, March 9th, 2024பெண்கள் தமது தேசத்தின் தாய்மைக்கான பரிசு என ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் நேற்றையதினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில், தமது மகளிர்தின வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் வசீகரமும் அழகும் கொண்டவர்கள் என்றும் தமது பாராட்டுக்களையும் பதிவு செய்துள்ளார்.
நாட்டின் சனத்தொகை வளர்ச்சிக்கு பாரிய அளவில் பங்காற்றிவரும் பெண்கள் எமது தேசத்திற்கான பரிசு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மார்ச் மாதம் எட்டாம் திகதி பொது விடுமுறையாக காணப்படுகின்றமையானது மேலும் பெண்களை கௌரவப்படுத்தும் செயல் எனவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
பெண்களின் இனிமையான பேச்சும், குடும்பங்களை வழிநடத்தும் பக்குவமும் இன்னும் அவர்களுக்கு அழகு சேர்ப்பதாக புட்டின் தமது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இலங்கையின் வரைபடம் புதுப்பிக்கப்படுகின்றது - நில அளவை திணைக்களம்!
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
பொய்யான குற்றச்சாட்டு - ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
|
|