புழுதிப்புயலில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

Friday, May 4th, 2018

வட இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

வீடுகள் இடிந்து விழுவதை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தமையாலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தப் புழுதிப்புயலின் தாக்கத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related posts: