பாரீஸ் தாக்குதல் தீவிரவாதியை பிரான்சுக்கு நாடு கடத்த பெல்ஜியம் முடிவு!

Saturday, April 2nd, 2016

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் திகதி தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. 130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளி, சலா அப்தே சிலாம் (வயது 26) என்பவரை பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, கடந்த மாதம் 18-ஆம் திகதி போலீசார் கைதுசெய்தனர்..

கைது செய்த 4 நாட்களில்தான் பிரசல்ஸ் நகரில் விமான நிலையத்திலும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தினார்கள். இதில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சலா அப்தே சிலாம், மௌனம் காத்து வந்தார்.  எனவும் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில், சலா அப்தே சிலாமை பாரீஸ் தாக்குதல் வழக்கை சந்திப்பதற்காக பிரான்சுக்கு நாடு கடத்துவதற்கு பெல்ஜியம் அதிகாரிகள் நேற்று (1) திடீரென முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கினர்.

இதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார். சலே அப்தே சிலாம், 10 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவார் என்று பெல்ஜியம் நீதித்துறை அமைச்சர் ஜீன் ஜாக்குஸ் உர்வாஸ் தெரிவித்தார்.

Related posts: