பாரம்பரிய உடையை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!
Monday, July 4th, 2016வெளிநாடுகளில் அரேபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் என்று தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் அரேபியர்களின் பாரம்பரியம் மிக்க தேசிய உடையை அணிந்திருந்தவரை ஐ.எஸ். தீவிரவாதி என்று கருதி பொலிஸார் கைது செய்ததை தொடர்ந் இந்த உத்தரவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடத்தள்ளது.
இதுதொடர்பாக தெரியவருவதாவது –
அரபு நாட்டைச் சேர்ந்த 41 வயதுடைய அஹமட் அல் மென்ஹாலி என்பவர் வைத்திய சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.
ஓஹியோ மாநிலத்தின் அவான் பகுதியில் உள்ள பேர்லேண்ட் உணவகத்துக்கு வந்த அவரது உடையை கண்ட அந்த ஹோட்டலின் வரவேற்பாளர் ‘இவர் ஐ.எஸ். தீவிரவாதியாக இருக்கலாம்’ என சந்தேகித்தார்.
இதையடுத்து, அவர் உடனடியாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பொலிஸார் அவர்மீது தாக்குதல் நடத்தி, கீழே தள்ளி, கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். உரிய விசாரணைக்கு பின்னர் அவர்
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்திருப்பது தெரியவந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார்.
தன்னை தரக்குறைவாக நடத்திய ஹோட்டல் வரவேற்பாளர் மற்றும் பொலிஸார் மீது வழக்கு தொடரப் போவதாக அஹமட் அல் மென்ஹாலி தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு சென்ற தங்கள் நாட்டின் குடிமகனை அவமரியாதையாக நடத்தியதற்காக அமெரிக்க அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் அரேபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் என்று தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரேபிய எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
‘வெளிநாட்டில் பயணம் செய்யும் நம்நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி, வெளிநாடுகளில் பொது இடங்களுக்கு செல்லும்போது அரேபியர்களின் பாரம்பரியம் மிக்க தேசிய உடையை அணிய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|