50 பேரை நாடு கடத்தும் மலேசியா!

Wednesday, March 15th, 2017

மலேசியா மற்றும் வட கொரியா இடையே ஏற்பட்டுள்ள விசாத்தடை மற்றும் அரசியல் தடையை தொடர்ந்து, 50 வடகொரிய நாட்டவர்களை நாடு கடத்துவதற்கு மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நம் கொலையால், வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு தடை செய்தது. இந்நிலையில், போர்னியோ தீவிலுள்ள சராவக் மாநிலத்தில் பணியாற்றும் 50 வடகொரிய தொழிலாளர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து நாடுகடத்தவுள்ளதாக துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கிம் ஜோங் நம் கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை மலேசிய காவல்துறை தீவிரமாக தேடிவருகின்றது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு தடை செய்து உத்தரவிட்ட நிலையில், வடகொரிய அரசும் மலேசியாவிற்கு எதிரான விசா தடையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரு நாட்டு தூதர்களும் பரஸ்பரமான முறையில் வெளியேற்றப்பட்டனர். அத்தோடு மலேசிய அரசின் விசாரணை முறைகளையும் வடகொரியா விமர்சித்து வருகின்றமையால் இரு நாட்டு உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. வடகொரிய மக்கள் வெளியேறுவதற்கு தடை இருந்தபோதும், அந்நாட்டை சேர்ந்த 50 பேரை நாடு கடத்த மலேசிய அரசு தீர்மானித்துள்ளதோடு அதற்கான காரணத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: