நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 50 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் ஏராளமான குழந்தைகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஒகுன்மோலாசுயி ஒலுவோல் கூறியுள்ளார்.
நைஜீரியாவின் தென்மேற்கில் உள்ள ஒரு நகரமான ஓவோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
எனினும், இந்த தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தின் போது, தலைமைப் பாதிரியாரும் கடத்தப்பட்டார் என்று நைஜீரியாவின் கீழ் சட்டமன்ற அறையில் உள்ள ஓவோ பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடெலெக்பே டிமிலியின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|