நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவால் – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரத்துக்கு முன்பு இயற்றப்பட்ட சட்டங்களில் தெளிவின்மை காணப்படுவதால் அவற்றுக்குப் பதிலாகப் புதிய சட்டங்களை இயற்ற வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இயற்றப்படும் புதிய சட்டங்கள் அனைத்தும் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும் என்றும் அது நீதி கிடைப்பதற்கான எளிமைத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

சட்டங்கள் இயற்றும்போது எவ்வளவு ஆண்டுக்கு அந்த சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் என்ற நடைமுறையை இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.

000

Related posts: