நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரம் – மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
Friday, February 10th, 2023
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கியில் 17,674 பேரும் சிரியாவில் 3,377 பேரும் இறந்துள்ளனர். அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிருடன் இருந்த பலர் தண்ணீர் அல்லது கடும் குளிரில் வெப்பம் இன்றி உயிரிழப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், உயிர் பிழைத்த பலர் தங்குமிடம் தண்ணீர் எரிபொருள் அல்லது மின்சாரம் இல்லாமல் தங்கள் உயிரை இழக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் !
சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் நடமாடும் ஆய்வுக்கூட பேருந்துகள் சீனாவினால் அன்பளிப்பு!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
|
|
|


