நிலவில் கால் பதித்த நான்காவது வீரர் மரணம்!

Monday, May 28th, 2018

முன்னாள் விண்வெளி வீரர் அலன் பீன் தமது 86 வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர்.

நிலவில் கால் பதித்து நடந்த நான்காவது விண்வெளி வீரர் இவராகும். விண்வெளி நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், அவர் ஓவிய துறையில் ஈடுபட்டு, பிற்காலத்தில் சிறந்த ஓவியராக திகழ்ந்தார்.

இவரினால் திட்டப்பட்ட பல விண்வெளி தொடர்பான ஓவியங்கள் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் பாராட்டைப் பெற்றது.

இவர் மேற்கொண்ட அண்டவெளி சாதனைகளில் கடந்த 1969 ஆம் ஆண்டு நிலவில் கால் பதித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் 1973 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற விண்வெளி குழுவிற்கு தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கவையாகும்.

முன்னாள் கடற்படை வாநூர்தி ஓட்டுனராக செயல்பட்ட இவர் 1963 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ வில் விண்வெளி பயிலுனராக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: