தொடர் குண்டு வெடிப்பு – நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்பு!

Wednesday, May 29th, 2019

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காத்மாண்டுவில் உள்ள சுகேதாரா, கட்டேகுலோ மற்றும் நாகதுங்கா ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. மேலும் கோடேஷ்வர், சட்டோபாடோ, குவாரகோ மற்றும் லகன்கேல் ஆகிய பகுதிகளில் இருந்த குண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனை நேபளா ராணுவம் உறுதிசெய்தது.

முதலில் எரிவாயு சிலிண்டர் காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்து என்று கருதியதாகவும், பின்னர் குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் நடைபெற்ற சோதனையில் நேத்ரா பிக்ராம் சந்த தலைமையிலான ஸ்ப்ளின்டர் மாவோயிஸ்ட் அமைப்பின் சதிச்செயல் என்பது அம்பலமாகியுள்ளதாக நேபாள போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேத்ரா பிக்ராம் சந்த தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

Related posts: